Category: கவிதைகள்

கருகலைப்பு, கொலை, உரிமை

கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான 11 வயது பெண்…

ஒரு கதை…

ஜெமோ, தனது தளத்தில் கொடுத்திருந்த சுட்டியின் மூலம், இந்த கதையை வாசித்தேன். அறைக்குள் புகுந்த தனிமை பொதுவாக மொழி கூடி வராத கதைகளில் தேர்ந்த இலக்கியம் நிகழ்வதில்லை…

கவிதை!

கவிதையில் கரு வேண்டும் சிலர்க்கு! புலன்கள் கொணர்ந்தவை எண்ணங்களுடன் புணர வேண்டுமே அதற்கு! எதையேனும் சொல்லவேணும் சிலர்க்கு! நான்கு பக்கங்களில் நச்சென கட்டுரை எழுதிவிடலாமே அதற்கு! எதுகை…

அம்பிகாபதி – இரண்டாம் பாகம்

(முதல் பாகம்) அரும்பு முகையாக அலர்ந்த செய்தி அளிக்கு தானாய் தெரிதல் போல் அன்பே, நம் அன்பை நமக்குள்ளே பகிர்ந்து கொண்டோம்… கம்பனிடம் கவி கற்க நித்தம்…

அம்பிகாபதி – முதல் பாகம்

கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம், கவிச்சக்கரவர்த்தியிடம் கவி படித்தாலும் நான் கவி பாட தொடங்கியது உன்னைக் கண்டுதான்… அரசவை காணும் ஆவலில் அரண்மனை வந்த நான் அதிரூபசுந்தரி…

நிலவு ஏன் தேய்கிறது….?

இரவின் ஒளியில் இருவரும் ரகசியங்கள் பேசினோம்… ஒட்டு கேட்க வந்த காற்றையும் ஒத்தி போக சொல்லி!! நின்னை மடி சாய்த்து நிலவொளியில் உறங்க வைக்கையில் நினைவில் ஒரு…

கண்ணீரில் கரைந்த காதல்

பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு… விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில் விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது பெண்டு என வாசல் தாண்ட கட்டுப்பாடிட்ட குடும்பம் குடிபெயந்தது வீதிக்கு… பதுங்கு…

ஒரு இடத்தை சுத்த படுத்தி விட்டு அவன் அமரட்டுமென தள்ளி அமர்கிறாள் அவள்!!

யாராக வேண்டுமானாலும் மாறிவிடுகிறது தலையணை!

வீடு தேடி அலையும் பறவைகள், மதியம் வெட்டப்பட்ட மரம்!

பல்கிபெருகி வயிற்றை நிறைத்துவிடுகிறது சென்ற வேலை உணவு விட்டுச் செல்லும் ஒரு துளி பசி!

கையில் ஒட்டிய வண்ணத்து பூச்சி சிறகின் நிறம் மலரிலிருந்து அங்கு ஒட்டியிருக்குமோ??

கண்ணின் கீழே மெல்லிய கீறல், கண்ணாடியில் முகம்!

எதுவும் பேசாமல், இருக்கி அனைத்தான். குழந்தை உறங்குகிறது!

நேற்று கனவில் தூரத்து மணியோசை அலாரம்!

வெள்ளை துப்பட்டா துவைத்தும் போகாத கறை. எங்கோ பிடித்திழுத்த சிறுவன்

காய்ந்த சருகில் புழுதி மணல், நேற்று பெய்யாத மழை

ஆடி காற்று இலைநிழல்களின் நடனம். மரமிடையே மின்விளக்கு!

முன் நொடி எந்த அறிகுறியும், மறுநொடி எந்த தடயமும் இல்லா மரணம் வேண்டும்!

என் பசி தீர்க்க மற்றவர்கள் சமைக்க, நீ சமைந்தாய்!