Category குறுங்கவிதை

ஒரு இடத்தை சுத்த படுத்தி விட்டு அவன் அமரட்டுமென தள்ளி அமர்கிறாள் அவள்!!

யாராக வேண்டுமானாலும் மாறிவிடுகிறது தலையணை!

வீடு தேடி அலையும் பறவைகள், மதியம் வெட்டப்பட்ட மரம்!

பல்கிபெருகி வயிற்றை நிறைத்துவிடுகிறது சென்ற வேலை உணவு விட்டுச் செல்லும் ஒரு துளி பசி!

கையில் ஒட்டிய வண்ணத்து பூச்சி சிறகின் நிறம் மலரிலிருந்து அங்கு ஒட்டியிருக்குமோ??

கண்ணின் கீழே மெல்லிய கீறல், கண்ணாடியில் முகம்!

எதுவும் பேசாமல், இருக்கி அனைத்தான். குழந்தை உறங்குகிறது!

நேற்று கனவில் தூரத்து மணியோசை அலாரம்!

வெள்ளை துப்பட்டா துவைத்தும் போகாத கறை. எங்கோ பிடித்திழுத்த சிறுவன்

காய்ந்த சருகில் புழுதி மணல், நேற்று பெய்யாத மழை

ஆடி காற்று இலைநிழல்களின் நடனம். மரமிடையே மின்விளக்கு!

முன் நொடி எந்த அறிகுறியும், மறுநொடி எந்த தடயமும் இல்லா மரணம் வேண்டும்!

என் பசி தீர்க்க மற்றவர்கள் சமைக்க, நீ சமைந்தாய்!

இரவுபகலாக காத்திருந்தேன்……… விடிந்தது!

சலனபடுத்த மனமின்றி கரையமர்கிறேன். சலனமின்றி நீந்திகொண்டிருக்கிறது நிலவு!!

கொழுந்து விட்டெரிந்தென் தேகம் சுடும் காமத்தீ அடங்கும் உன் யோனிகுழி கசியும் ஒரு துளியால்!

உனக்கான கடிதங்களை ஒட்டாமல்தான் அணுப்புகிறேன். படிக்கபடவில்லை என்பதை அறியாமலேனும் இருப்பேனல்லவா???

கலவி முடிந்துன் தலைகோதி பிடிச்சிருக்கா என்ற கேள்விக்கு உன் விழி சொல்லும் பதிலுக்காவவே மீண்டும்மொருமுறை இயங்குகிறேன் ஒவ்வொரு முறையும்

உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியும்…. என்ன பிடிக்குமானுதான் தெரில

உற்று நோக்கின், தீயின் உட்கருவிலும் இருள்

« Older posts

© 2021 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑