நாட்காட்டியின் கிழிந்த பக்கங்களில் சிதறி கிடக்கும் அவள் நினைவுகளை சேகரிக்கிறேன்… ஒவ்வொரு முறையும் அவளே ஒவ்வொரு முறையும் புதிதாய்..! கைக்குள் அடங்கும் முன் பறந்து செல்கிறாள் தூக்கங்களை தூக்கிக்கொண்டு. என் இரவுகள் தேடல்களாய் கரைந்து கொண்டிருக்கையில் அவள் வசபடும் முன்பே விடிந்து விடுகிறது என்றும் அவள் விலகிய நாளிள் இருந்து கிழிக்கபடாமல் நாட்காட்டி மட்டும்…
© 2022 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑