Category கவிதைகள்

கருகலைப்பு, கொலை, உரிமை

கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான 11 வயது பெண் குழந்தை தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? ஒருவர், இவை மூன்றுமே ஒரே வகைதான். மூன்றுமே குற்றம் என கூறினால் என்ன நினைப்பீர்கள்? ஆம், அமேரிக்காவின் ஓஹையோ… Continue Reading →

ஒரு கதை…

ஜெமோ, தனது தளத்தில் கொடுத்திருந்த சுட்டியின் மூலம், இந்த கதையை வாசித்தேன். அறைக்குள் புகுந்த தனிமை பொதுவாக மொழி கூடி வராத கதைகளில் தேர்ந்த இலக்கியம் நிகழ்வதில்லை என்பது என் எண்ணம். அதை, இந்த கதை மாற்றியுள்ளது. இதை ஒரு சிறந்த படைப்பு என கூறுவதில் எனக்கு தயக்கம்‌ இருந்தாலும், இந்த கதையின் பேசுகளம் முக்கியமானது…. Continue Reading →

கவிதை!

கவிதையில் கரு வேண்டும் சிலர்க்கு! புலன்கள் கொணர்ந்தவை எண்ணங்களுடன் புணர வேண்டுமே அதற்கு! எதையேனும் சொல்லவேணும் சிலர்க்கு! நான்கு பக்கங்களில் நச்சென கட்டுரை எழுதிவிடலாமே அதற்கு! எதுகை மோனைகள் கலந்து விளையாட வேண்டும் சிலர்க்கு! என்னை அன்னை வெம்மை ரம்பை என்பதற்கு அர்த்தம் தேடாமல் இருக்க வேண்டுமே அதற்கு! பல வாசிப்பு கடந்தும் புரியவே கூடாது சிலர்க்கு… Continue Reading →

அம்பிகாபதி – இரண்டாம் பாகம்

(முதல் பாகம்) அரும்பு முகையாக அலர்ந்த செய்தி அளிக்கு தானாய் தெரிதல் போல் அன்பே, நம் அன்பை நமக்குள்ளே பகிர்ந்து கொண்டோம்… கம்பனிடம் கவி கற்க நித்தம் வந்து, சித்தம் நிறைந்து காதல் கற்பித்தாய் விழிவழி நாம் பேசிய காதல் மொழியை செவிவழி ஒட்டகூத்தன் ஒட்டு கேட்டானோ?? கோமகள் கரம் பிடிக்க கவிகோ மகன் கொண்ட… Continue Reading →

அம்பிகாபதி – முதல் பாகம்

கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம், கவிச்சக்கரவர்த்தியிடம் கவி படித்தாலும் நான் கவி பாட தொடங்கியது உன்னைக் கண்டுதான்… அரசவை காணும் ஆவலில் அரண்மனை வந்த நான் அதிரூபசுந்தரி உன்னைக் கண்டேன் அமரேசன் சபையிலிருந்து இறங்கியவளோ என அதிசயித்து நிற்கையில் அமராவதியென உன் பெயர் கூறிய தோழனை அமரனாவாயென வாழ்த்தினேன்! தங்க விதானத்தில் மன்னன் தந்தையின் கவிகளை… Continue Reading →

நிலவு ஏன் தேய்கிறது….?

இரவின் ஒளியில் இருவரும் ரகசியங்கள் பேசினோம்… ஒட்டு கேட்க வந்த காற்றையும் ஒத்தி போக சொல்லி!! நின்னை மடி சாய்த்து நிலவொளியில் உறங்க வைக்கையில் நினைவில் ஒரு சந்தேகம்… “நிலவு ஏன் தேய்கிறது….??” தேவதை நீ அருகிலிருந்ததாலோ என்னவோ தேவன் தோன்றினான் என்முன்னே பதில் சொல்ல… உன் உறக்கம் கலைக்காமல் மென் குரலில் அளவளாடினோம்… “சாதாரணனின்… Continue Reading →

கண்ணீரில் கரைந்த காதல்

பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு… விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில் விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது பெண்டு என வாசல் தாண்ட கட்டுப்பாடிட்ட குடும்பம் குடிபெயந்தது வீதிக்கு… பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும், உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்! விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த – ஓர் இரவு வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்… இருநூறு… Continue Reading →

ஒரு இடத்தை சுத்த படுத்தி விட்டு அவன் அமரட்டுமென தள்ளி அமர்கிறாள் அவள்!!

யாராக வேண்டுமானாலும் மாறிவிடுகிறது தலையணை!

வீடு தேடி அலையும் பறவைகள், மதியம் வெட்டப்பட்ட மரம்!

பல்கிபெருகி வயிற்றை நிறைத்துவிடுகிறது சென்ற வேலை உணவு விட்டுச் செல்லும் ஒரு துளி பசி!

கையில் ஒட்டிய வண்ணத்து பூச்சி சிறகின் நிறம் மலரிலிருந்து அங்கு ஒட்டியிருக்குமோ??

கண்ணின் கீழே மெல்லிய கீறல், கண்ணாடியில் முகம்!

எதுவும் பேசாமல், இருக்கி அனைத்தான். குழந்தை உறங்குகிறது!

நேற்று கனவில் தூரத்து மணியோசை அலாரம்!

வெள்ளை துப்பட்டா துவைத்தும் போகாத கறை. எங்கோ பிடித்திழுத்த சிறுவன்

காய்ந்த சருகில் புழுதி மணல், நேற்று பெய்யாத மழை

ஆடி காற்று இலைநிழல்களின் நடனம். மரமிடையே மின்விளக்கு!

முன் நொடி எந்த அறிகுறியும், மறுநொடி எந்த தடயமும் இல்லா மரணம் வேண்டும்!

என் பசி தீர்க்க மற்றவர்கள் சமைக்க, நீ சமைந்தாய்!

« Older posts

© 2022 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑