வாசித்த புத்தகங்களை, ரசித்த திரைப்படங்களையும்‌ உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பகுதி. திரை விமர்சனம் எழுதுவது உண்டு என்றாலும் அது முழுமையாக பார்த்து, சமயங்களில் இரண்டு முறை பார்த்து விட்டு பல விஷயங்களை பற்றியும் எழுதுவது. இங்கு  படங்களை விமர்சிக்க போவதில்லை. படம் பெயரும் உங்கள் ஆர்வத்தை தூண்ட கதை பற்றிய சிறு குறிப்பு மட்டுமே தருவேன். பெருவாரியாக வேறு மொழி படங்கள் இடம்பெறும். சினிமாக்கு அது ஓகே, ஆனா புத்தகங்கள்..??
புத்தகங்களை பற்றி எப்படி எழுத??? (இந்த பதிவே இதுக்குதானே..!)
பொதுவாக ஆசிரியர் பற்றி சில வரிகள், புத்தகத்தின் பெயர் கூறி கதை களம் பற்றி…..பிறகு பாராட்டி சில வார்த்தைகள்….சில மேற்கோள்கள்… ஒரு template தயாராக இருக்கிறது அனைவரிடமும்.  இணையத்தில் தேடிய அனைத்தும் கூட இப்படி தான் இருந்தது. ஆனால் அது நிஜமான விமர்சனமா??? புத்தகம் பற்றிய முழு தகவலையும் தருகிறதா??
தப்பி தவறி கூட குறைகள்  குறிப்பிட படுவதில்லை. குறைகள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் அனைத்து புத்தகத்தின் அனைத்து பரிமானமும் பிடித்துவிடுமா அனைவருக்கும்??? அதே சமயம், புத்தகம் தரும் அனுபவம் ஒருவருக்கொருவர் பன்மடங்கு  வேறு படும்.  என் உணர்வுகளை வைத்து மட்டும் எடை போடவும் இயலாது அல்லவா???  என்ன செய்ய??
இங்கு பெரும் சிக்கல் ஜாம்பவான்களாக பலர் உருவாக படுத்தி வைத்திருப்பவர்களை விமர்சித்தல் பலருக்கு உவப்பில்லை. கட்டாயம் அவர்களை பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது என்ற கேள்வி எழும்.
மேலும் வழக்கமான, சுஜாதா, ஜெமோ  போன்றவர்கள் இலக்கியவாதி அல்ல, இலக்கியம் என்பது ஏதோ சாதாரணனுக்கு எட்டாத வஸ்து, வாசித்து புரியாத படைப்புகளை கொண்டாடும் மனப்பான்மை இவற்றுடன் ஒன்றி செல்ல இயல்வதில்லை என்னால்.
சாமானியனை சென்றடைய இயலா படைப்பினால் என்ன உபயோகம்?? அனைத்து புத்தகங்களையும் இப்படிதான் வகை படுத்த போகிறேன் என்றல்ல, ஆனாலும்  இப்பொழுதே சொல்லிவிடுவது சிறப்பு.
Simple, என் கருத்துடன் ஒத்து போக இயலவில்லை என்றால் நான் அந்த அளவிற்கு இலக்கியத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் அடையவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். (உங்கள் கருத்துகளை பதிய தயங்க வேண்டாம்.) முதல் பதிவில் சொன்னது போல் சாதாரனனாக வாசிப்பில் அடி எடுத்து வைக்கிறேன்.  வாசிக்கும் புத்தகங்கள் எனக்கு கொடுத்த அனுபவங்களை அப்படியே பதிவு செய்கிறேன்.  Formalitiesஐ ஒதுக்கி வைப்பது என் எழுத்துக்கு நல்லது!
கடைசியாய்,
INCEPTION பலருக்கு புரியவில்லை என்றாலும் அது கொண்டாட படுவது வேறு, யாருக்கு புரியக்கூட இல்லை என்றாலும் சமஸ்கிருத மற்றும் தெலுகு கர்நாடக சங்கீத பாடல்கள் போற்ற பட்டது வேறு!
பிகு:

பழைய பாணியில் முன்பு எதற்கோ எழுதிய பித்தன் அறிமுகம் இங்கே. 

இந்த தலைப்பில் உள்ள பதிவுகள் அனைத்தும் இங்கே.