என் அழுகைக்கு
பிறர் காரணம்
தேடியவரை பிரச்சனை இருந்ததில்லை…
பசி என்றோ
வலி என்றோ
பயம் என்றோ
அவரவருக்கு
இஷ்டமான காரணங்கள்
விருப்பமான தீர்வுகள்!
வளர தொடங்கியபின், காரணம்
என்னிடம் கேட்க தொடங்கினார்…
பெரும்பாலும்
பதில் பற்றி கவலை இருந்ததில்லை
கேட்பதுடன் கடமை முடிந்து விடுவதால்.
வளர்ந்த பின் தான்
இந்தப் பிரச்சனை எழுந்தது
“ஆண்கள் அழக்கூடாது”
என புது சட்டம் பேசினர்.
மீறி அழுதால்
காரணம் சொல்ல வேண்டும்…
ஆறுதல் கிடைக்கிறதோ இல்லையோ
ஆயிரம் விவாதங்கள்.
யாரும் கண்டுகொள்ளாமல்
அழுவது எப்படி என யோசிக்க தொடங்கினேன்…
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!