கடந்த சில வாரங்கள் தமிழகத்தின் தலைப்பு செய்தி – விஸ்வரூபம்…
பல தடைகளை கடந்து 7ம் தேதி தமிழகத்தில் வெளியீடு.
6ம் தேதி இரவு நண்பனுடனான மின்னரட்டையில்
அவன்: ” ம்‌ம்.. அப்ப விஸ்வரூபம் பார்த்துடுவ கொஞ்ச நாள்ல..”
நான்: ” தெரில மச்சி.. might be….”
அவன்: “இல்லடா.. பிழைகள் விமர்சனம் எழுதவாவது பார்ப்பனு நினைச்சேன்…”
நான்: “எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதுறது இல்ல… பார்த்து எனக்கு தோணுச்சுனா தான் எழுதுவேன்..also..முதல் வாரம் டிக்கட் கிடைக்றதே கஷ்டம்…”
அவன்: “ஓ..சரி சரி..”
.
.
இப்படியாக ஒரு வாரம் கழித்து தான் படம் பார்க்க முடியும்னு நினைத்திருந்தேன்….காலைல ஒரு நாலு மணிக்கா துங்க போறத்துக்கு முன்னாடி பழக்க தோஷத்துல முகநூல் போனா வெற்றி தியேட்டர்ல முதல் நாள் டிக்கட்டே காலியா இருந்துது…. விடுவோமா??? புக் பண்ணி முதல் நாளே படம் பார்த்தாச்சு.
படம் பார்த்ததும்

வித்தியாசமான கதை களம் கொண்ட average movie.. 3.5/5னு

ஒரு கீச்சுல விமர்சனம் எழுதிட்டு விட்டுட்டேன். அவளோ தான் அந்த படம் worthம் கூட…ஆனா தொடர்ந்து இணையத்துல வந்த ஆஹா ஓஹோ விமர்சனமும்.. ஹாலிவுட் ஒப்பிடலும்… ஒரு படி மேல போய் துன்பியல் சித்திரமும்…. IMDBல அவளோ ratingம்.. .. பார்த்துக்ட்டு அமைதியா இருக்க முடியல..
அப்படி என்ன சரித்திர வரலாறு காணாத படம் எடுத்திருக்கார்….??
இல்லாத கதைய விக்கி தொடங்கி இணையம் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியாச்சு.. மேலும் piratebay.seல 400MBக்கு நல்ல பிரிண்ட்டும் கிடைக்குது.. அதனால கதைய சொல்ல கூடாதுன்ற விமர்சன விதில இருந்து வெளியேறி கதை + திரைக்கதை எப்படி இருக்குனு பார்ப்போம்….
முதல் காட்சியில் இருந்தே என்னை ஈர்த்தது பூஜா குமாரின் குரல். சில பல காட்சியில் அவர் காட்டும் தாராளத்துக்கு ஆடியன்ஸ் கிட்ட செம ரெஸ்பான்ஸ்…..
அடுத்து கமல்.. கதக் நடனம்… மற்றும் அந்த முதல் 30 நிமிடங்களுமே, விஸ்வரூபம் எடுக்கும் வரை ஒவ்வொரு frameமிலும் பெண்ணின் நளினம், PERFECT…. ஆனா கமல் அப்படி கச்சிதமா செய்யலானா தானே வியப்பு???
பின் சிலப்பல திருப்பங்கள்.. வில்லன் இடத்திற்கு சென்று அவர்களை அடித்து வீழ்த்தி வீட்டிற்கு வந்து….. நடுவுல FLASH BACK….கமல் அல்குவைதாவில் சேர்வதில் இருந்து தொடங்கி…. அந்த அமைப்பின் முக்கிய அங்கமாவது வரை…. இப்ப கமல் வீட்ட திடீர்னு FBI சுத்தி வளைச்சு இவர் தப்பி…. chasing scene…. FBI,வில்லன் ரெண்டு பேர் கிட்டயும் மாட்டாம … இந்த கலோபரத்துலையும் இன்னொரு FLASH BACK முடிச்சி … பூஜா அலுவலகத்துக்கு போய்… என்னவோ கம்ப்யூட்டர்ல நோண்டி… அதுக்குள்ள வந்த FBI கிட்ட மாட்டி…அடிவாங்கி… இந்திய தூதுவர் வந்து இவர் நல்லவர்னு சொன்னதும்.. அமேரிக்கா போலீசுக்கு வழிகாட்டி… .. நடுவுல ரெண்டு குண்டு வெடிக்கும்.. இவர் மூணாவது வெடிக்காம காப்பாத்துவார்… ஷப்பா….. மீதி கத அடுத்த பாகத்துல.!!!
மேட்டர் என்னனா இந்த கதைல லாஜிக்குனு ஒண்ணு இல்லவே இல்ல….
முதல சின்ன சின்ன சொதப்பல்ல இருந்து பெருசுக்கு போவோம்…
முதல் சீன்… நிரூபமா…அந்த டாக்டர் கூட முன் பரிச்சயம் இல்லாம தான் தன் மொத்த கதையையும் சொல்றாங்க … பின்ன எப்படி “நம்ம ஜகன்நாத் மாமா???” எந்த ஜகன்நாத்னு அவங்களுக்கு எப்படி தெரியும்???
இது கூட பரவால்ல…. ஹீரோயினு…. இப்ப நம்ம ஹீரோ வரார்… முதல் தடவ பார்த்ததும் ஒமர் சுக்ரீயா சொல்றார்… உடனே உங்களுக்கு தமிழ் எப்படி தெரியும்னு ஹீரோ கேக்றார்..!
தமிழே பேசாதவர்கிட்ட தமிழ் எப்படி தெரியும்னு எப்படி கேட்கலாம்னு நாம கேட்க கூடாது…
ஹீரோக்கு அவங்க மொழி தெரியாதுனு சலிம் மொழி பெயர்த்துக்ட்டு இருக்கார்… ஒரு இடத்துல “துவா”க்கு என்ன அர்த்தம்னு ஹீரோவையே கேக்றார்..
இன்னொரு சீன்ல அணு கதிர அளக்க ஒரு நாலு பேர் முகமூடி கவசம்லாம் போட்டுக்ட்டு பார்த்துக்ட்டு/அளந்துக்ட்டு  இருக்காங்க.. அங்கயே பக்கத்துல 3 போலீஸ் சதா டிரஸ்ல பாதுகாப்புக்கு  நிக்றாங்க.. அவங்களுக்கு ரத்தம் இவங்களுக்கு தக்காளி சட்னியா??
படத்துல பாதிக்கு மேல வசனம் புரியலான… மீதிக்கு இவங்க போடுறsubtitle அத விட கொடும… Cover your feetனு ஒமர் சொல்றத்து தமிழ உடம்ப மூடுனு வருது…
இன்னொரு இடத்துல போலீஸ் ஆன்ட்ரியா கிட்ட
cop: “come again”
Andria: “let me go n i will come again”
இந்த மாதிரி நுட்ப காமெடிக்கு நான் மட்டும்தான் தியேட்டர்ல சிரிச்சேன்றது ஒருபக்கம்…
ஆனா இதுக்கு அவங்க தமிழ் சப் டைட்டில்
“மொதல போக விடு, அப்பறம் கம் அகெய்ன் பண்றேன் ” are you kidding????
அதே மாதிரி.. ஏரோபிளேன்ல இருந்து நிக்றவன் நடகிறவன் எல்லாரையும் சுடுறான்… கமல் மட்டும் போய் ரெண்டு ஜீப் கூடிக்ட்டு வரார்.. வில்லன் கிளம்பர வரைக்கும் யாரும் அந்த ஜிப்ப சுடவும் இல்ல… வாட் எ மிராக்கில்….
அடுத்து அபாஸி ரோமங்களை அகற்றும் காட்சி… நம்மூர் வந்த அஜ்மல் கசாப்லாம் மொட்ட போட்ட மாதிரி தெரியலையே… அதே மாதிரி தற்கொலை தாக்குதல் நடத்தும் அந்த சிறுவனும் சவரம் செய்யவில்லை… அபாஸி மட்டும் என் அப்படி பண்ணனும்????
கிளைமேக்சுக்கு ஹீரோயின் வேணும்னு ஓடி வராங்க… கீழ நிக்றவன் கிட்ட அவங்க ஆளே சொல்லி மேல ஏறி வந்த அப்பறம் சாவகாசமா ஹெட் போன்ல மேல அனுப்புன்னு டாம் உத்தரவு தறார்.. உங்கள யார் பாஸ் கேட்டா???
கமலு முஸ்லிமா ஹிந்துவானு குழப்பம் வார கூடாதுணு முக்கியமான கட்டத்துல நாமாஸ் பண்ணுவார்…. அமைதியா ஒரு வார்த்தையும் சொல்லாம…
அத பார்த்து ஒரு போலீஸ் இன்னொருத்தார் கிட்ட என்ன பண்றார்னு கேப்பார். அவரு இவரு கடவுள் கிட்ட நமக்காக பிராத்தன பண்றார்னு சொல்வார்… “எல்லாம் வல்ல கடவுளா”னு கேப்பார்… உடனே ஆமாம் அததான் அவர் பாஷைல சொல்றார்ண்ணுவார்… கவனிச்சு பார்த்தா back groundல கூட கமல் எதுவுமே சொல்லல….
போலீஸ் சம்பவ இடத்துக்கு வரத்துக்கு முன்னாடியே அங்க NEST படையை சேர்ந்தவர்கள் வந்திருப்பார்கள். NEST என்பது Nuclear Emergency Support Team. அணு பாதிப்புகளுக்கு உதவுவதற்கான தனி பிரிவு… ஒரு வார்த்தைக்காக கொஞ்சம் ஆழ்ந்து கண்டு பிடிச்சு  இத பிரயோகிச்சது சந்தோஷம்… ஆனா அமெரிக்க படைல இருக்ரவங்களுக்கு விஷயம் தெரியாது…. சீசியம் பாம் பத்தி நிரூபமா போய் சொல்லனும்ன்றதுலாம்.. மூணு வயசுலையே காது குத்தியாச்சு கமல்
அப்பறம் நம்ம டாக்கீன்ஸ்… கடைல இருந்து பார்சல் வாங்கி கார்ல போட்டுட்டு , பக்கவாட்டுல தப்பிச்சு போக குதிக்றப்ப போன் தொலைஞ்சு மாட்டிக்றார்… ஆனா அந்த கேப்க்குள்ள போன் பண்ணி தூதரகத்துக்கு அனுப்பிட்டேன்னு செய்தி சொல்லிட்டார்னு ஜகன்நாத் சொல்றார்.. என்ன ஸிபீடு….
இப்ப அல்டிமேட் பாருங்க…
FARADAY SHIELD வேணும்னு ஹீரோயின் அந்த கூப்பாடு போட்டு கடைசில அவன (oven) எடுத்து கவுத்து வைச்சு காப்பத்துற மாதிரி காமெடி பண்ணி இருப்பாங்க…
கொஞ்சம் technicala சொல்லிதான் ஆகணும்… FARADAY SHIELD என்பது எந்த வகை கதி வீச்சும் உள்ள வராம தடுக்க கூடிய சாதனம்.. அவன் (oven) மூடி இருக்றப்ப கதிர் வீச்சு வராது சரி… தொறந்து கவுத்து வைச்ச???? அடி பக்கம் கதிர் வராதா???
மழைக்கு குடை பிடிச்சாலும் நனையதான் செய்வோம்.. ரெயின் கோட் போட்டாதான் எல்லா பக்கமும் பாதுகாப்பு.. மற்றும் கதிவீச்சு என்பது எந்த பக்கமா இருந்தும் துளைத்து உள் நுழைய கூடியது… இன்னும் பாருங்க… போன்ன ஸ்விட்ச் ஆப் பண்ணலாம் இல்ல flight modeல போடலாம்… அதெல்லாம் அவங்க தலவலி… ஆனா nuclear oncology அதாவது கதிர் வீச்சை மருத்துவதிற்கு பயன் படுத்துவது பற்றி படிக்கும் ஹீரோயினுக்கு சீசியம் வெடிகுண்டை பற்றியும்…. அதை இயக்குவது பற்றியும்… இதற்கான தனி படை பிரிவு போலீசாரைவிட அதிகம் தெரியுமென்பது சாரி பாஸ்,,,!
சற்று முன்பு கிடைத்த தகவலின் படி, microwave ovenனை FARADAY SHIELD ஆக தர்க்கப்படி theoretically உபயோகிக்கலாம் என்றாலும்… practically அது சாத்தியமில்லை. நண்பர் இதை முயற்சி செய்தும் பார்த்துவிட்டார். மேலதிக தகவலுக்கு இதை படிக்கவும். அப்படியே தர்க்கப்படி பார்த்தாலும் கதவை திறந்து கவுத்து வைத்தல் எற்புடையது அல்ல. ( நன்றி :  @catchvp ) – 12/2/2013, இரவு 111:42.
திரைக்கதைலதான் இவளோ ஓட்டைனா கதைல……அதுக்கு முன்னாடி..
இசை அருமை.. பாடல்கள் gives you the feel…. theme music செம… வசனகள் சில இடங்களில் நச்..// ISIக்கு வேல பார்ப்பான்… காசுக்கும் வேல பார்ப்பான்… யாரோட காசுக்கும்… // ஆனா பல இடங்களில் புரியவே இல்லை முதல் தடவை…
காட்சி படுத்துதல்… எல்லாருமே குறிப்பிட்ட மாதிரி உஞ்சல் காட்சி… நைஸ்..
ஆனா அதுக்குனு இதுல ஆஃப்கானிஸ்தான் மக்கள் வலிய சொல்லி இருக்கார்… துன்பியல் சித்திரம்.. அது இதுனு வராதிங்க… அத சொல்லனும்னா ஆஃப்கான களமா வைச்சு படம் எடுக்கணும்… வெறும் இட்டு நிறப்ப உபயோகித்திருக்கிறார் இதில்…
கதை என்ன ??
மெயின் ஸ்டோரி இருக்கட்டும்… flash back பாருங்க… கமல் அல்குவைதால சேர வருகிறார்… அதுக்கு ஆதரமா காமிப்பது கமல் தலைக்கு 5,00,000 தருவதாய் அரசின் விளம்பரம். ஆனா அது வேணாம் தமிழ் தெரிஞ்ச ஜிஹாதி வேணும்னு ஒமர் சொல்றார் (சர்வதேச தரத்துல கடமையாற்றும் தமிழக போலீசார ஓட்டு கேட்க்கவா??) ஆனா அந்த புகைபடத்தில் இருப்பவருக்கும் கமலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லையே.. எல்லாருமா குருடு???
மேலும் கமல் அப்பா சின்ன வயசுலையே விட்டு பிரிஞ்சிட்டார்னு சொல்றார்.. அப்படியே கொஞ்சம் முன்னாடி போனா கமல் பெரிய தீவிரவாதியின் மகன்னுதான் சேரவே அனுமதி தருவாங்க… ஆரம்பமே குழப்பம்.. மங்களம்..
ஒன்னா உயிரா பழகுண கமலும் ஓமரும் அமெரிக்கா வந்ததும் எதிரி ஆவராங்க….. ஒமர் குடும்பத்த கமல் தான் கொன்னார்னு சொல்றார்… அப்படி அவங்களுக்குள்ள என்ன ஆச்சுனு சொல்லாம தொடரும் போட்டா எப்படி?? நாங்க என்ன சீரியலா பாக்றோம் கமல் சார்???
சரி அத விடுங்க.. அமெரிக்கா வரலாம்..
அந்த வேர் ஹவுஸ் சிலர கொலை பண்ணி தப்பி வீட்டுக்கு வந்து விடுகிறார் கமல்… அங்கு கொலை நடந்தது வெளியே தெரியும் வாய்ப்பு குறைவு.. அப்படியே தெரிந்தாலும் உள்ளூர் போலீஸ் விசாரிக்கலாம்… கமலே இது NewYorkPoliceDepartmentக்கு அப்பாற்பட்டதுணு சொல்றார்.. அப்பா NYPD தானே சுத்திவளைச்சிருக்கணும்??? எதுக்கு ஒரு கொலைக்கு FBI வராங்க???
கைது செய்து விசாரிக்கையில் குண்டு வெடிக்கிறது கதிர் வீச்சு அளவு அதிகமாகிறது…. அதற்கும் கமலுக்கும் சம்பந்தம் உள்ளதென எப்படி கண்டு கொள்கிறார்கள்??? அதே மாதிரி கைதுக்கு முன்னாடியே அந்த அதிகாரியின் கையை மடக்கி அடக்குகிறார்… அப்பயே தான் இன்னார்னு  சொல்லி இருக்கலாமே??? அது இவர்களுக்கு அப்பாற்பட்டதுணும் சொல்ல முடியாது அந்த அதிகாரி கூட சேர்ந்துதான் வேல பாக்றார்..
சரி அப்படி வேல பண்ணி என்ன பன்றார்.. வேர் ஹவுஸ் வெடிப்ப தடுக்க முடியல…. பக்கத்து ஸ்கூல் பசங்கள காப்பாத்துனார் ஓகே…
ஆனா இதுக்கு பாரத பிரதமர் போன் பண்ணி அல்குவைதா ஸிலீபர் செல்களை அழித்ததுக்கு நன்றி சொல்றார்னா…. எங்கையோ இடிக்குதே..
கமல்-ஒமர் பேசும் பொழுதோ அல்லது எங்கையுமே dirty bomb வெடிக்கவைப்பதற்கான திட்டமே இல்லை… அந்த காணொளியும் வெளியிடப்படவில்லை… அப்ப dirty bomb இருக்குனு இவங்களுக்கு எப்படி தெரியும்?????
ஒமரின் திட்டப்படி பறவை காலில் கட்டி அமெரிக்க உள்துறையை குழப்பியாகி விட்டதே??!
அப்படியே இவங்க ஓட்டு கேட்டு ஏற்கனவே தெரியும்னா அமெரிக்க மண்ணில் நடக்கும் சதி திட்டம்… அவர்களிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் தனிச்சையாக RAW எப்படி செயல் படலாம்?? (அமெரிக்க ஊத்தரவு இல்லாமல் காஷ்மீரிலேயே அணுவும் அசைவதில்லை…) கமல் அங்கு சென்று… அமெரிக்க ஆராச்சி கூடத்தில் bug செய்வது (ஒட்டுக்கேட்ப்பது) என்பது seriously you want us to believe it Kamal???
முதல் பாதியில் ஆப்கான் காட்சிகளின் நீளமும்… ஒண்ணுமே இல்லாததற்கு பிரதமரின் அழைப்பும்.. ஸ்லீப்பர் செல் என்ற அவரின் உபயோகமும்… துப்பாக்கி படம் வெளியான பின் விஸ்வரூபத்தில் மாற்றம் செய்யப்பட்டது என கேள்வி பட்டது உண்மையாக இருக்குமோ என எண்ண தோன்றுகிறது
எது எப்படியோ… பல குழப்பங்கள் நிறைந்த ஒரு below average film by Kamal.
நான் இதை ஹாலிவுட் தரத்துடன் எல்லாம் ஒப்பிடவில்லை. கதை திரைக்கதையை மட்டுமே பார்க்கிறேன், எஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே!!
மத்தது எல்லாம் கூட மன்னிக்கலாம் டாக்கீன்ஸின் அழைப்பை எடுக்கும் சலிம்  ” Mi6‌ம் RAWம் எங்களுக்கு வேட்டு வைக்க நினைச்சா நாங்க அத விட பெரிய வேட்டா வைப்போம்”னு சொல்றான்.ஒண்ணும் தப்பில்ல என்ன ஒரே விஷயம் Mi6 என்பது ஐக்கிய ராஜியத்தின் அதாவது பிரிட்டிஷ் அரசின் உளவுத்துறை…
ஒரு குழப்பமில்லாத கதை திரைக்கதை அமைக்க கூட இயலாவிட்டால் ஆஸ்கர் கனவு வீண் கமல் அவர்களே..!!
பிகு:
முகநூலில் நண்பர் கோகுல் பிரசாத்தின் விளக்கத்தை ஏற்று பின்வரும் வரி நீக்கப்படுகிறது.

போலீஸ் மார்புல 6-7 வாட்டி சுட்டும் மயங்கி மட்டும் விழுந்த அபாஸி கமல் கைல அதுவும் முட்டிக்கு கீழ சுட்டதும் இறந்து போவான்…

அபாஸி படுத்திருந்த நிலையில் நெற்றி ஓரம் சுடப்படும் ரத்தம் முழுதும் கையில் தெறிப்பதை தவறாக புரிந்துகொண்டேன்.
பதில் கிடைக்காத எனக்கு தோன்றிய சில கேள்விகள்:
ஒமரின் பார்வை எப்பொழுது பறி போகிறது?? முதல் காட்சில இருந்து கருப்பு கண்ணாடிதான் அணிகிறார்…. ஆனா டாக்ட்டரை பாக்றப்ப மட்டும் இரண்டு கண்ணாலும் முறைக்றார்… கொஞ்சம் நேரத்துலையே கண்ண கசக்கி..(டாக்டர் தான் மெட்ராஸ் ஐ வியாதி கொடுத்துட்டாங்களா???)
அடுத்து மூணாவது மனுஷன் கமல் முன்னாடி முகம் காமிக்கும் ஒமரின் மனைவி ஒமர் முன் மட்டும் என் முகத்தை மூடுகிறார்???