இங்லிஷ் விங்லிஷ்…. நான் மொதமொதல பார்த்த ஹிந்தி படம். அதனால பதிவு எழுதியே ஆகணும்னு முடிவு பண்ணி….நீங்க இத படிச்சிகிட்டு இருக்கீங்க…!
EV poster
மேல இருக்குற படத்த பார்த்துட்டு தேவதர்ஷிணி எப்படி ஹிந்தி  படத்துல நடிச்சாங்ன்ற கேள்வியோட சீட்ல போய் உட்காந்தேன்…..நல்ல கூட்டம்.. ஆனா என்ன வந்ததெல்லாம் பேமிலி வித் குட்டிஸ்..(ஃபிகர் இல்லன்ற கவலை என்னோட போட்டும்)….மொத சீன்ல தூங்கி எழுந்துக்ற பொண்டாட்டி.. .காபி போட்டு..பேப்பர் படிச்சு…மாமியாருக்கு பிஸ்கட்டோட காபி கொடுத்து…கணவன ஆபிசுக்கும்…பசங்கள ஸ்கூலுக்கு கிளப்பி அணுப்பும் வேலையின் நடுவே…குளிச்சு கண்ணாடில பொட்டு வைக்கும் அதி அற்புத தருணத்தில் முகத்தை  முழுதாய் காட்டுகிறாள். அட நம்ம ஸ்ரீதேவி..!! சில நிமிடங்கள் அப்படியே மூன்றாம்பிறை நோக்கி பயணிக்கும் மனதை…கதை பக்கம் திருப்புவோம்…
முதல் குட்டி
முதல் குட்டி
ஸ்ரீ தேவிக்கு ரெண்டு பசங்க….ஒன்னு குட்டி.. இன்னொன்னும் குட்டி… இன்னொன்னு வளர் இளம் வயதுப் பெண்…நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவா தெரியாத அம்மானா கொஞ்சம் இளக்காரம்… ஸ்ரீதேவிக்கு இதனால கொஞ்சம் வருத்தம்.. ஆனாலும் பொருத்துக்ட்டு இருக்காங்க. இப்ப திடீர் வரவா அமெரிக்காலருந்து போன். அங்க இருக்க ஸ்ரீதேவியோட அக்காக்கு..ச்சை..அக்கா பொண்ணுக்கு கல்யாணம், எல்லாரும் பேமிலியோட அமெரிக்கா வரணும்ன்னும்.. கல்யாண ஏற்பாட பார்த்துக்க ஸ்ரீதேவி மட்டும் சில வாரம் முன்னாடியே வரணும்னும். பசங்கள பிரியுற செண்டிமென்ட்டெல்லாம் கட் பண்ணா பிளைட்ல ஹீரோயினுக்கு பக்கத்து சீட்ல அமித்தாப் (இங்க அஜித்)  இறங்குறப்ப ‘முதல் அனுபவம் முதல் வாட்டிதான் வரும்.. ஒழுங்கா ஆழ்ந்து அனுபவிச்சுக்கோங்கன்னு’ சொல்லிட்டு டாட்டா காமிக்றார்…
இதுக்கு மேல சொன்னா மொத்த கதைய சொல்லிட்டேன்னு பழி வரும் என்மேல…ஏன் எனக்கு அந்த பொல்லாப்பு?!? சுருக்கமா சொல்றேன், அம்மணி அமெரிக்கால இருந்து திரும்பறதுக்குள்ள செமயா இங்லிஷ் பேச கத்துக்குது. எப்படின்றத தியேட்டர்லையோ, கம்ப்யூட்டர்லையோ, டி.வீ.டிலையோ… சில மாசம் கழிச்சு பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிலயோ பார்த்துக்கோங்க…
ஸ்ரீதேவியின் நடிப்பு பத்தி நான் சொல்ல வேண்டியதில்ல… செம எக்ஸ்பிரஷன்ஸ்…. வயது கூடியது சில சீன்லதான் தெரியுது…. மத்தபடி..அதே பழைய ஸ்ரீதேவிதான் கண் முன்னாடி…மகளின் பேச்சுக்களை ஏற்க இயலாமல் தவிப்பதாகட்டும்… ஆர்டர் செய்யத் தெரியாமல் அமெரிக்க ஹோட்டலில் திணருவதாகட்டும்…அக்காவை சமாளிப்பதாகட்டும்…படம் முழுதும் ஸ்ரீதேவியின் ஆக்கிரமிப்பு.
இயக்குனர் கௌரி ஷின்டேவை பாராட்டியே ஆகவேண்டும்.  மிக மிக சாதாரண கதையை கொஞ்சம் கூட தளர்வில்லாத (ஸ்ரீதேவி போல்!!) திரைக்கதை மூலம் அழகாக படமாக்கியுள்ளார்… தமிழ் வசனங்களில் எவ்வளவு சொதப்றாங்கனு தெரியல… ஆனா ஹிந்தியில் வசனங்களும் நச். “ஏன் எல்லா தெருக்கும் நம்பர் போட்டு வச்சுருக்காங்க’, ஏழுமலை தெரு, முனுசாமி தெருன்னு வைச்சா என்ன’ ‘அர்த்தம் புரியாம பேசுவதில்தான் எத்தனை ஆனந்தம்’ ‘பெண்ணுக்கு தேவை பாராட்டுதல் அல்ல சிறிதேனும் மரியாதை’ ‘இங்லிஷ் தெரியாம அமெரிக்கால எப்படி சமாளிக்கப் போறிங்க? தமிழ் தெரியாம நீ இங்க சமாளிக்கலையா’ போன்றவை.  அனைத்து கதாபாத்திரங்களின் தேர்வும் நேர்த்தி. அளவான தேவையான நடிப்பு. என்ன ஒன்னு அழகு ஸ்ரீதேவிக்கு கொஞ்சம் எடுப்பான புருஷன பிடிச்சிருக்கலாம். பட் ஸ்ரீதேவியோட பெரிய அக்காவோட சின்ன பொண்ணு…அம்புட்டு அழகு..நாள் முழுக்க பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலருக்கு. கண்ணுபட போது சுத்தி போட சொல்லுங்க…!!

கொஞ்சம் வித்தியாசமாக கதை. யதார்த்த சினிமா விரும்பிகள் கட்டாயம் பார்க்க வேண்டும்.
அரங்கை விட்டு வெளியே வந்து கொஞ்சம் யோசித்தால் படம் ஆங்கிலம் கற்பதை பற்றி அல்ல…  மனைவியாகிய ஒரு பெண் குடும்பத்தில் சந்திக்கும் அவமானங்கள்…நகையாடல்கள்..அது அவளை பாதிக்கும் ஆழம்..அதை கடந்து குடும்பதிற்காக அவள் செய்யும் தியாகம் இவற்றை பற்றியது என்பது தெளிவாகும்… கொஞ்சம் ஆழமான தளத்தை முதல் படத்திலேயே அழகாகா கையாண்ட இயக்குணருக்கு சல்யூட்
         –> கட்டாயம் பார்க்க வேண்டும் <–

  • பார்க்கலாம்
  • வெட்டியாக இருந்தால் பார்க்கலாம்
  • வெட்டியாக இருந்தாலும் பார்க்க வேண்டாம்