நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம்.. அதுவும் box officeல் சக்கைபோடு போடுகிறது. விமர்சனங்களும் சாதகமாகவே அமைய எதிர்பார்ப்பு அதிகரிக்கவே செய்தது. சார்லிசாப்ளின் அளவிற்கு இல்லையென்றாலும் இம்சை அரசன் அளிவிற்காவது எதிர்பார்த்தேன், இம்சைதான் மிச்சம்!

http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/Kanna-Laddu-Thinna-Aasaiya-Pongal-Release-Poster.jpg
ஒரு பெண், மூன்று காதலர்கள், கடைசியில் ஒரு ஜோடி….. மிக சாதரணமான கதையால் ரணபடுத்த முடியுமென நிருபித்துள்ளார் இயக்குணர் மணிகண்டன்! பதிவில் கதைக்கான விமர்சனத்தை தேட வேண்டாம். படத்தில் கதையை தேடி சலித்து போய்தான் இந்த பதிவே.
பொதுவாக படத்தின் நன்மைகளை பாராட்டிவிட்டு குறைகளை அடிகோடிட்டு  நகர்வதுதான் என் பாணி. இங்கு நிறை என்று எதை சொல்ல?? இன்று போய் நாளை வா படத்தை அப்படியே எடுக்காமல் கதை, திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்களாம்… ஹ்ம்ம்.. முன்னாடி பெஞ்ச் பையன  பார்த்து பதில் எழுதுனாலும் change பண்ணிதான் எழுதுவோம்! படத்தின் ஒரே ஆறுதல்..பசிச்ச வாயிக்கு பச்ச தண்ணி கிடைச்ச மாதிரி…சந்தானத்தில் so called timing dialogues…!
படத்துல ஒன்னு opening song வைக்கனும் இல்லனா intro scene வைக்கனும். ரெண்டுத்தையும் வைச்சு…  ஆமா உங்க டாண்ஸ் மாஸ்ட்டர் யாருபா??? சூப்பர் சிங்கர் பசங்க இதவிட நல்லா ஆடுதுங்க… ஆரம்ப காட்சி முதலே annual dayவில் பள்ளி குழந்தைகள் நடத்தும் நாடகம் போல் ஒரு amateurishதனம்.!
நகைச்சுவை படத்தில் கதை எதிர்பார்ப்பது வீண்… கதை இல்லாத இடத்தில் நடிப்பை எதிர்பார்ப்பதும் வீண்… ( டிக்கட் செலவு 150ம் வீண்தான் ஒத்துக்குறேன்..).. at-least படத்தை தாங்கி பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய திரைகதையிலும் ஏகபட்ட திணிப்புகள்! அதைவிட அதிக சொதப்பல்கள்! ஒரு நாலு சீன்ல தலை காமிக்க பட்டிமன்ற ராஜா..அதுக்கு ஒரு நக்கல் டயலாக்கு… ஹீரோவ நல்லவனா காமிக்கனும் அதுக்கு பப்புக்கு நீச்சல் கத்து கொடுக்கனும்.. அதனால முன்னாடியே அணைல போய் அவனுக்கு தண்ணீனா பயம்னு காமிச்சிங்க OK… யார் கூடவும் அதிகமா பழகாத பப்பு, ஹீரோவோட சகஜமாவது எப்படினு காமிச்சிங்களா?? ஹீரோ வீட்ல யாரும் இல்லனு செய்தி வருது. உடனே கிளம்பி ஹீரோயின் வீட்டுக்கு வராங்க மூனு பேரும்… ஒன்னாதானே வந்து சேரனும்?? அது என்ன சொல்லி வைச்ச மாதிரி ஒருத்தர் பின்னாடி ஒருத்தர்?? மொத சீன்லையே ஹீரோ பொண்ணுங்க விஷயத்துல செம வீக்னு காமிச்சாச்சு… அது எப்படி இந்த காதல்ல மட்டும் புத்தனா மாறி… ஹீரோயின பார்ப்பத தாண்டி எதுவுமே அவளோ தாக்கம் ஏற்படுத்துற மாதிரி நடக்கலையே!! பவர் பிறந்தநாள்.. சொத்தப்பனும்னு போய்ட்டு என்ன பண்றாங்க??? அதெலாம் விடுங்க.. நடவுல எதுக்கு அந்த டீகட சீன்?? பாதி பேர் எழுந்து டீ குடிக்க போயிட்டாங்க…
அட, என்னப்பா நீ காமெடி படத்துல திரைகதை பார்த்து காமெடி பண்ணிக்ட்டு இருக்கனு சொல்றிங்களா?? சரி விடுங்க.. நடிப்பு பக்கம் வருவோம்.. பாவம் ஹீரோ.. அவர்தான் ஹீரோனு அவருக்கே கடைசி சீன்லதான் தெரியுது,நாலு  முத்தம் கொடுத்துக்றார்..மத்தபடி நடிக்கனும்னுலாம் யாரும் சொல்லி தரல போல..ஹீரோயின் வயசாய்டுச்சு…முகத்த குளோஸப்லலாம் காட்டுறாங்க… மைக்ரோஸ்கோப்  வைச்சு பார்த்தாலும் எக்ஸ்பிரசன்ஸ்லாம் கிடைக்காது போல… முழு படத்துலையும் தேடிட்டேன்.. பவர் கிட்ட காசு வாங்கிட்டு குரு வணகத்தப்ப கைதட்ற கோஷ்டிதான் நல்லா நடிச்சிருக்கு!!
இப்பதான் பதிவோட முக்கிய பாகத்துக்கு வந்திருக்கோம். இத ஏன் முக்கியமானதுனு சொல்றேன்னா இந்த பாகத்துல நான் சொல்லிருப்பது முக்கியமான விஷயம்ன்னு.. (அவ்வ் காலைல சன் மியூசிக் VJ பேசுனத கேட்ட தாக்கம்..) எல்லாரும் பவர் ஸ்டார்தான் படத்தோட ஹீரோ.. அவர் வர சீன்ல மக்கள் கை தட்டுறாங்க அப்படி இப்படினு பில்ட்டப்! ஆனா யோசிச்சு பாருங்க.. திரையில் அவர் தெரியும் பொழுது விசில்கள் பறப்பது அவரை கலாய்க்கதானே??!! எப்படியோ மக்களின் அங்கிகாரத்தை பெற்று விட்டார், ரசிக்க/சிரிக்க வைக்கிறார் என்று சிலர் கூறலாம்… ஆனால்…
பவர்ஸ்டாரின் குரலில் மாடுலேஷன் இல்லை… கவுண்டர் தொட்டு சந்தானம், சிவ கார்த்திகேயன் வரை காமெடி இயங்குவது டயலாக் டெலிவரி… வாய்ஸ் மாடுலேஷனில் தான்… மேலும் அவர் நடிப்பிலும் expressions சுத்தமாக மிஸ்ஸிங்… ஏனோ என்னால் அவரை ரசிக்க இயலவில்லை
…ஆனால் இப்படியாக காட்சிபொருளாக மட்டுமே இருந்தால் வெகு எளிதில் சலித்து போவார்…ஒரு காமெடியனாக நிலைத்து நிற்க அவர் மேலும் கற்க வேண்டும், அல்லது புதிதாய் எதையாவது முயற்சிக்க வேண்டும்!
படத்துல இன்னொரு மிக பெரிய மைனஸ் டப்பிங்.. பல இடத்துல டப்பிங்கும் உதடசைவும் ஒத்து போகவே இல்ல.. வேறு யாரோ பேசுவது போல் உள்ளது.. படம் பார்ப்பவனை எரிச்சலூட்டும் விஷயமிது.
இசை-average
பின்னனி-below average
கதையில்லாமல், சொதப்பலான திரைகதையுடன் காதில் ரத்தம் வர வைக்கும் மொக்கைகள் நிறைந்த படத்தில் தேறும் சந்தானத்தின் டயலாக்குகளை அண்ணன் @senthilcp யின் இந்த பதிவில் படித்து கொள்ளுங்கள். மிச்ச படுத்திய டிக்கட் செலவில் ஒரு பகுதியை என் வங்கி கணக்கில் சேர்பித்துவிடவும்!
பாக்கியராஜ் சந்தானத்திடம் நஷ்ட்டஈடு கேட்க போகிறாராம்.. நான் கூட டிக்கட் 150+ பாப்கார்ன் 50 + நைட் ஷோ பார்த்துவிட்டு 2:30க்கு வீடு திரும்பிய கால் டேக்ஸி செலவு 300 = 500 ரூபாய் நஷ்ட்ட ஈடு கேட்க போகிறேன்!

  •  கட்டாயம் பார்க்க வேண்டும்
  • பார்க்கலாம்
  • வெட்டியாக இருந்தால் பார்க்கலாம்

  –> வெட்டியாக இருந்தாலும் பார்க்க வேண்டாம் <–