பதிவுலகில் அடி எடுத்து வைக்கிறேன், அதிகம் அறிந்தவனாக அல்ல. படிக்க பார்க்க கேட்க  எத்தனையோ விஷயங்கள் பாக்கி இருக்கையில் மற்றவர்கு சொல்ல என்னிடம் அதிகம் இல்லைதான், அனால் வாருங்கள் ஒன்றாய் பயணிப்போம் தமிழை, உலகை, இயற்கையை நோக்கிய எனது தேடலில். …

அதிகம் படித்ததில்லை…இணைய பதிவுகள் மிக குறைவு, ஆதலால் எனது பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து அதிக எண்ணங்கள் இல்லை….ஆனால் எப்படி இருக்காது என கூறி விடுகிறேன்.
1 )  பொது நிகழ்வுகள்/ செய்திதாள்களில் வரும் செய்திகளை அப்படியே தரபோவதில்லை..
2 ) புத்தகமோ திரைப்படமோ விமர்சனமென்ற பெயரில் அதன் கதையை விவரிக்க போவதில்லை.
3) ஒரே பதிவில் பல (வித்தியாசமானவையாக இருந்தாலும்) புகைப்படங்கள்/தரவுகள்/சுட்டிகள் பதிவேற்ற போவதில்லை.
4) definitely no how to do/do it yourself tips.
சுருங்க சொன்னால் கூகிளிடம் சாமர்த்தியமாக கேட்டு பெற இயலும் எதுவும் எனது பதிவுகளில் இருக்கா..
பெருசா சொல்லிட்டேன்… இப்ப வேற என்ன தான் எழுதுறது????
என்னை பற்றி கூறலாம்…ம்ம்ம்ம்…
பூமிக்கு வந்து இன்றுடன் 19 வருடம் முடிகிறது..
கோடை விடுமுறை முடித்து திரும்பும் குழந்தைகளிடம் விடுமுறையில் என்ன செய்தாய் என  கட்டாயமாக எழுதி பெறப்படும் கட்டுரைகளை போல் எனது வாழ்க்கையை விவரிப்பதால் யாருக்கும் என்ன பயன்? ஆனால்…
எனது டிவிட்டர் BIOவில் கூறியிருப்பது போல்..
புழுவாகி கூடுடைத்து சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சியின் சிறகொடிந்த பின்பான வாழ்வை கண்டவன்… நான் இழந்ததை மற்றவர்கள் இழந்து விடாமல் தடுக்க முயல்கிறேன்.
வாழ்வில் நான் கற்றதும் பெற்றதும் இழந்ததும் பல….
என் வெற்றிகளை பற்றிய கதைகள் சுவாரசியமாக இல்லாமல் போகலாம்…
வெற்றிக்கு உழைத்த விதம் உதவியாக இருக்கும்…
எனது தோல்விகளை பற்றியும் அது தந்த வலிகளை பற்றியும் உங்களுக்கு என்ன கவலை??
ஆனால் அந்த தோல்விகளை எதிர்கொண்ட விதம் எவர்க்கேனும் உதவ கூடும்…
சில பல தற்கொலை முயற்சிகளின் பின்புள்ள கதைகளை பொதுவில் வைக்கும் நோக்கமும் இல்லை / வைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவற்றை கடந்து வந்த கதை எவரையேனும் காப்பாற்ற கூடும்..
சொந்த கதைகளை தாண்டி, படமோ புத்தகமோ…நான் ரசித்த கோணத்தை பகிற, தினம் கற்கும் சிறுசிறு பாடங்களை பகிற…உங்களிடமிருந்து கற்க….எப்பொழுதாவது எழுதும் கவிதைகள் மூலம் உங்கள் பொறுமையை சோதிக்க…நானும் பதிவுலகில்…
உங்கள் எதிபார்ப்புகளை நிறைவேற்றுவேனா என தெரியவில்லை…..
குறைகள் கட்டாயம் இருக்கும்…அவற்றையும்
பிடிக்கவில்லை என்றால் அதையும் தெரியபடுத்துங்கள்..!!
அன்புடன்,
லாஓசி

டிஸ்கி: மேலுள்ள பிள்ளையார் சுழி சும்மா டெகரேஷனுக்கு  மட்டும்தான்…..