இப்படி நேத்து கீச்சிட்டு இப்ப புத்தாண்டு சிறப்பு பதிவு எழுதணுமான்னுதான் முதல யோசிச்சேன்…
அதுலையும் பாருங்க நான் இணையத்தில் நுழைஞ்சு ஒரு வருஷம் கூட முடியல. பிழைகள் தொடங்கி ஆறு மாசம்தான் ஆகுது…. அதனால தளத்துக்கு திரும்பி பார்க்கிறோம் நிகழ்சிலாம் ஒத்து வராது.  நாம வேற ஸ்கூல் புள்ளையா போய்ட்டோமா (சரி சரி காலேஜ்…) வருஷம் ஆரமிக்றது முடிறதுலாம் மார்ச் ஜூன்லதான்… ஜனவரி வந்து  half year! இப்படியாக இந்த வருஷ புது காலண்டர் கூட கிடைக்காத கையறு நிலைல இருக்கும் என்னிடம் சொல்ல எதுவும் இல்லாததால் அமைதியா இருப்போம்னுதான் முடிவு பண்ணி வைச்சிருந்தேன்.
ஆனா நண்டு  சிண்டுல இருந்து blog வைச்சிருக்க எல்லாரும் இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷலா  எழுதுறாங்களா…நாம மட்டும் சும்மா இருந்தா நல்லா இருக்குமா?? அது மட்டுமில்லாம காலகாலமா இருந்து வரும் வழக்கத்த உடைக்க நான் யாரு… இது பிழைகள்  கொண்டாடும் முதல் புத்தாண்டு வேற… சம்பிரதாயமுறைபடி செய்றதுதானே நல்லது? அதான் நானும் புத்தாண்டுக்கு ஒரு பதிவு எழுதிடுறதுன்னு அவசர முடிவெடுத்தேன்…… ஆனா என்ன எழுதுறது??
கடந்த 365 நாளுக்கும் சேர்த்து வைச்சி இன்னிக்கு உட்காந்து diary  எழுதலாம், ஆனா இந்த வருஷம் சாப்பிட கூட நேரமில்லாம உழைச்சேன்… நாலு புக் எழுதுனேன்… பத்து கத எழுதுனேன்…அத பண்ணேன் இத செஞ்சேன்னு சொல்ல எதுவுமே இல்ல…365 நாளும் மூச்சுவிட்டத தவிர்த்து ஒன்னும் பெருசா கிழிக்கல. சரி பொது நிகழ்வ பத்தி எழுதலாம்னா கிரகம் அதுக்கும் ஞானம் பத்தாது….. விருதையும் முந்திரி கொட்ட மாதிரி ரெண்டு வாரம் முன்னாடியே கொடுத்தாச்சு….
எதுவும் இல்லனா ஒழுங்கா உட்காந்து அடுத்த வருஷத்துக்காவது  பிளான் போடலாம்…  ஆனா பாருங்க அமெரிக்கா ஐரோப்பாலாம் உங்க செலவுல சுத்தி பார்க்கணும்… பிழைகள்ல இருக்க பதிவெல்லாம் ரெண்டு பேர் இந்த வருஷ இறுதிக்குள்ள ஆங்கிலத்துல மொழிபெயர்த்து அமேசான்ல வெளியிடலானா தற்கொலை பண்ணிக்கணும்ன்ற மாதிரி பேராசைலாம் எதுவுமே இல்ல அடியேனுக்கு. so அதுவும் முடியாது… அப்ப என்னதான் எழுதுறது??
அட பாருங்களேன்.. யோசிச்சிக்டே நாலு பத்தி வந்துடுச்சு… சரி அப்ப “புத்தாண்டு சிறப்பு பதிவு”க்கு என்ன எழுதுறதுன்னு யோசிச்சு தனி பதிவா போடவா…இல்ல இதையே சிறப்பு பதிவா  வைச்சிக்கலாமா??!!
வாசகர்கள் அனைவருக்கும் பிழைகள் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!