மேற்கொண்டு படிக்கும் முன் தானை தலைவர் சாருவின் இந்த பதிவை படித்து விடுவது உடல் மனம் ஆன்மா ஆவி என்ற சகலத்திற்கும் நல்லது! 
….பல விமர்சனங்கள் இருக்கிறது , அது அனைத்திற்கும் விளக்கமளிக்க ஆரம்பித்தால் நான் சைக்கோவாக மாற நேரிடும் என்பதால் இந்த வாசகர்களிடம் காசு கேட்டு வாங்கி ரெமி மார்டின் குடிப்பது , கால்வின் க்ளைன் ஜட்டி போடும் விஷயத்திற்கு மட்டும் ஒரு சின்ன விளக்கம் சொல்லலாம் என் முயற்சிக்கிறேன்.
“என”  முயற்சிக்கவும்! 
அவரை பிச்சைக்காரன் என திட்டுகிறீர்கள். அவரே அதைத்தானே சொல்கிறார். இந்த சூழலில் ஒரு எழுத்தாளன் வேறு வேலை இல்லையெனில் பிச்சைக்காரனாக மட்டுமே இருக்க முடியும் , நான் பிச்சைக்காரந்தான் என்கிறார்.
பிச்சை எடுத்து தான் ஒரு தமிழ் எழுத்தாளன் வாழ முடியும்னு சொல்ல வறீங்க அப்படிதானே?
அப்புறம் பிச்சை போட்ட காசில் குடிக்கிறார் , பிச்சை போட்ட காசில் தாய்லாந்து போகிறார் என புகார்.
பிச்சை எடுக்காம வாழவே முடியாத சூழலில் பிச்சை வந்த காசில் தாய்லாந்த் போக முடியுதுனா….. சரி பிச்சை காசே பில்லாயிரம் ரூபாய் வந்து இருக்கும்னு வைச்சிப்போம்.
இந்த புகாரை பிச்சை போடாதவர்கள்தான் வாசிக்கின்றனர்.
என்ன ஒரு கண்டுபிடிப்பு!! புகார் வாசிக்ற அளவுக்கு ஞானம் உள்ளவன் ஏன் சார் பிச்சை போட போறான்??
பிச்சை போட்டாலுமே பிச்சை போட்டதுமே அந்த பணத்தின் மேல் உங்களுக்கு உரிமை போய்விடுகிறது.பிச்சை போட்ட காசை இப்படித்தான் செலவழிக்க வேண்டும் என சொல்ல முடியாது .
கோயில் கும்பாபிஷேகம்னு டொனேஷன் வாங்கிட்டு  தண்ணி அடிச்சாலும் கேள்வி கேட்க கூடாதுனு சொல்லுவீங்களோ?? லைப்ரரி வைக்க வாங்கின காசு எங்க போச்சு?!
எனக்கு என்ன குழப்பம் எனில் அவருக்கு 50 ரூபாய் முதல் 5,00,000 வரை கொடுத்து உதவிசெய்யும் யாரும் இப்படி புகார் வாசிப்பது இல்லை. அவரே ரெமி மார்ட்டின் குடிக்க வேண்டும் , யாரேனும் காசு இருந்தால் கொடுங்கள் என வெளிப்படையாக கேட்கிறார்.
தமிழ் எழுத்தாளன் 1-13 ரெண்டு வாட்டி படிச்சிட்டேன் பாஸ்… ஒரு இடத்துல கூட “ரெமி மார்ட்டின் குடிக்க வேண்டும் , யாரேனும் காசு இருந்தால் கொடுங்கள்” இப்படிலாம் எழுதி இல்லையே… கூலி மறுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால்தான் மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன் இப்படி தானே எழுதி இருக்றார்.. கை காசு எல்லாம் செலவு பண்ணி ஏமாந்து போயிட்டேன்… அதனால காசு கேக்றேன்னு சொல்றார்… அடுத்த வேலை உணவிற்கு கை ஏந்தும் நிலையை தானே உருவக படுத்தி உள்ளார்??
விருப்பமுள்ளவர் கொடுக்கிறார். விருப்பம் இல்லையெனில் கொடுக்க வேண்டாம் , சிம்பிள் . ஏன் பிளட் பிரஷர் ஏறி கொதித்து திட்ட வேண்டும்? ……. ஒன்று யோசியுங்கள் . எனக்கு ஹார்ட் பிராப்ளம் , நிறைய மருந்து சாப்பிட வேண்டும் என சொல்லி மட்டுமே காசு வாங்கி , வெளிப்படையாக சொல்லாமல் ரெமி அடித்தால் உங்களுக்கு தெரியவா போகிறது?அதைப்போல செய்வது சாருவுக்கு கஷ்டமா என்ன?வெளிப்படையாக இருப்பதுதான் நமக்கு பெரும் கஷ்டம். சாருவுக்கு செம ஈஸி . நீங்கள் வேண்டுமானல் உங்கள் மனசாட்சிப்படி வெளிப்படையாக இருக்க முயற்சி செய்து பாருங்கள். எவ்வளவு கஷ்டம் என புரியும்.
நாங்க சொல்றதுலாம் இதோ இந்த மாதிரி… 

644214_1766133300194066_180232012_n

ரெமி மார்டின் குடிக்கனும்…. ஹிமாலயா போகனும்னு காசு கேளுங்க… கொடுக்றவங்க கொடுக்கட்டும்… 

அத விட்டுட்டு தமிழ் எழுத்தாளர் மாதிரி ஒரு தொடர் பதிவு எழுதி… 

“ஆனால் என் மாத சம்பளத்தில் அத்தியாவசிய செலவுகள் போக…வங்கிக் கணக்கில் 200 ருபாய் தான் இருக்கிறது. நூறு ரூபாயை உங்களுக்கும் நூறு ரூபாயை எனக்கும் வைத்துக் கொள்கிறேன். வெறும் நூறு ருபாய் அனுப்புவது உறுத்துகிறது. ஆனால் நிறைய அனுப்ப இயலாமல் தான் இதனை அனுப்புகிறேன்.  தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.”

இது போன்றவர்களிடம் பணம் பறிப்பது குறித்து மட்டுமே எங்கள் விமர்சனம்!

கடைசியாக , இவர் ஆடம்பரமாக செலவு செய்கிறார் என காசு கொடுக்காமலேயே திட்டிக்கொண்டு இருப்பவர்களிடம் ஒரு கேள்வி . கடும் பணக்கஷ்டத்தில் எளிமையாக , சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் பஞ்ச பரதேசி போல வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனை எழுத்தாளர்களுக்கு நீங்கள் பண உதவி செய்துள்ளீர்கள்?
நியாமான கேள்வி… என்ன செய்ய நல்ல எழுத்தாளர்கள் பிச்சை பணத்தில் வாழ விரும்புவதில்லையே!