ஒரு கதை எழுதணும்னு ரொம்ப நாளா ஆச. ஆனா எதுவும் உருப்படியா  தோணல . பிழைகள் ஆரமிச்சு ஒரு வருஷமாகபோது இன்னும் கதை எழுதலானா யாரும் மதிக்க மாட்டாங்களே… அதான் எப்படியோ உட்காந்து ஒரு கதை எழுதிட்டேன், அதுவும் பேய் கதை.

ஒரு ஊர்ல ஒரு அழகான வீடு. ரொம்ப பெருசாவும் இல்லாம சிறுசாவும் இல்லாம… 2 BHK சைஸ்ல மிடில் கிளாஸ் வீடு. அந்த வீட்டுக்கு ஒரு குடும்பம் குடி வராங்க. குடும்பம்னா நாம் இருவர் நமக்கு ஒருவர்னு அளவான குடும்பம். ஒரு அம்மா ஒரு அப்பா ஒரு குட்டி பொண்ணு! அந்த பொண்ணு தான் நம்ம கத ஹீரோயின்! பாப்பா பேரு ஷாலு! யார் கேட்டாலும் “I am studying in 7th standard B section”ன்னு அழகா சொல்லும். அப்பா அம்மா ஆபீஸ் போயிட்டு வீடு திரும்ப ராத்திரி எட்டு மணி ஆகுமா…ஷாலுக்கு ஸ்கூல் 4-5 மணிக்கே முடிஞ்சுடும்.  தினமும் ஸ்கூல் முடிஞ்சதும் வந்து பக்கத்து வீட்டு பாட்டி கிட்ட இருந்து வீட்டு சாவி வாங்கி uniform மாத்தி, home work முடிச்சு, வீட்ல லைட் போட்டுட்டு பாட்டி கூட அம்மா அப்பா வர வரைக்கும் பேசிக்கிட்டு விளையாடிக்டு இருப்பா.
காலாண்டு தேர்வு வர வரைக்கும் எல்லாம் இப்படி  நல்ல படியா நடந்துக்ட்டு இருந்துது. (காலாண்டு தேர்வ copy பண்ணி பக்கத்து tabல googleல போட்டு தேடுபவர்களுக்காக, காலாண்டு தேர்வு = quarterly examinations). எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டதும் ஷாலுக்கு போர் அடிக்க ஆரமிச்சிது. அம்மா அப்பா கிளம்பி போன அப்பறம் தனியா வீட்ல என்ன பண்ணுவா பாவம்? பாட்டிதான் வீட்ட சுத்தி இருக்க செடிக்குலாம் தண்ணி ஊத்து, பாத்தி கட்டு நாம புதுசா கொஞ்சம் செடி நட்டு வளர்க்கலாம்னு சொல்றாங்க. பாபாவும் ஜாலியா அந்த வேலலாம் செய்ய ஆரமிச்சா. அப்பதான் கவனிச்சா, வீட்டுக்கு பின்னாடி காம்பவுண்ட் சுவர் ஓரமா கொஞ்ச இடம் ரொம்ப காஞ்சி போய் இருந்துது. அதுக்கு பக்கத்துல புல்,செடி எல்லாம் நல்ல வளர்ந்து இருந்தது.பாப்பா  பாட்டி  கிட்ட “பாட்டி, அங்க ஏன் காஞ்சி போய் இருக்கு, நாம அங்க தண்ணி ஊத்தி ஒரு மரம் நாட்டு வளர்க்கலாமே””னு சொல்றா. உடனே பாட்டி அந்த இடத்துக்குலாம் போக கூடாது மத்த இடத்துல மட்டும் வேல பாருனு சொல்றாங்க. பாப்பாவும் அப்ப சரினு கேட்டுக்ட்டு வீட்ட சுத்தி நிறைய செடி எல்லாம் நட்டு தண்ணி ஊத்திட்டு பாட்டி கூட வந்து டிவி பார்க்க உட்காந்துக்ட்டா.
வழக்கம் போல ஒரு மணிக்கு கரண்ட் போனதும் மெதுவா பாட்டி கிட்ட, “பாட்டி பாட்டி அந்த இடத்துல மட்டும் ஏன் தண்ணி ஊத்தாதனு சொன்னிங்க… அங்க மட்டும் ஏன் காஞ்சி போய் இருக்கு”னு கேட்டா. பாட்டி அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது, பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்னு சொல்றாங்க. ஷாலு சும்மா விடுவாளா? “சொல்லுங்க பாட்டி சொல்லுங்கணு” ரொம்ப அடம் பிடிச்சு அழுது கடைசில பாட்டி அந்த ரகசியத்த சொல்லிடுறாங்க.
இப்ப பாட்டி சொன்ன கத, “உங்க விட்டுல உங்களுக்கு முன்னாடி 3 பேர் இருந்தாங்க. ஒரு uncle, aunty அப்பறம் அந்த uncleலோட அப்பா. அவங்க அந்த தாத்தாவ ஒழுங்காவே கவனிச்சிக்கல. அவர தனி ரூம்ல பூட்டி வைச்சு இருப்பாங்க. வேலா வேலைக்கு ஒரு தட்டுல சாப்பாடு மட்டும் கொடுப்பாங்க. மத்த படி அவர் கூட யாரும்  பேச கூட மாட்டாங்க. யாருமே கண்டுக்காம இருந்த அவர் ஒரு நாள் செத்து போயிட்டார். இவங்களும் எல்லாரையும் கூப்பிட்டு செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சி முடிச்சிட்டாங்க. ஆனா இப்ப புது பிரச்சன வர ஆரமிச்சிது. அவங்க வீட்ல சாப்பிட உட்காரப்பலாம் அந்த தாத்தா சாப்பிட்ட தட்டு தானா அவங்க உட்கார இடத்துக்ட்டு வந்துடும். இவங்க பயந்து போய் தட்ட பீரோல வைச்சு பூட்டி வைச்சாங்க. ஆனாலும் தட்டு பீரோவ தொறந்து இவங்க சாப்ட்ற இடத்துக்கு வந்துடுச்சு”
“தட்டு தானா பறந்து வந்துச்சா பாட்டி?”
‘ஆமா செல்லம், கரக்ட்டா இவங்க வீட்ல எங்க உட்காந்து சாப்பிட்டாலும் வந்துடும். அந்த uncle தட்ட கிணத்துல கூட போட்டு பார்த்தார், ஆனா மறுபடியும் வந்துடுச்சு”
பாப்பா பயந்து போய் பாட்டி சொல்றதையே கேட்டுக்ட்டு இருந்துச்சு.
“அவங்களும் அந்த தட்ட வீட்டுக்கு வெளிய எடுத்துக்ட்டு போய் எங்கயாவது போட்டுடலாம்னு பார்த்தா, தட்ட கைல எடுத்தா  வீட்ட விட்டு வெளிய போகவே முடியல. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்து போய் ஒரு மந்திர வாடிய கூட்டிக்ட்டு வந்தாங்க. அவரும் என்னவோ பண்ணி பார்த்தார் தட்டு சொல்ற பேச்சையே கேக்கல. அப்பறம் அந்த மந்திரவாதி போய் ஒரு பெரிய மந்திரவாதிய கூப்ட்டுக்க்டு வந்தார். அவர் ரொம்ப பெரிய பூஜ பண்ணி யாகம் நடத்தி அந்த தட்ட வீட்டுக்கு பின்னாடி புதைச்சிட்டார். அப்பறம் அதுக்கு மேல இவர் கொஞ்சம் மஞ்சள் குங்குமம்லாம் போட்டு மந்திரம் சொல்லி மூடி வைச்சிட்டார்.  அவங்களும் வீட்ட வித்துட்டு போயிட்டாங்க. நீ கேட்டது அந்த இடம்தான். அதான் அங்க செடி முளைக்கல. நீ அங்கலாம் போக கூடாது சரியா?”
“சரி பாட்டி, நான் ஏன் அங்கலாம் போக போறேன், எனக்கு பயமா இருக்கு”னு சொல்லி பாட்டி மடில ஷாலு படுத்துக்ட்டா .
ஷாலு பயங்கர வாலுனு எத்தன பேருக்கு தெரியும்? பாட்டி கிட்ட அப்படி சொல்லிட்டு அன்னிக்கு சாய்ங்காலாமே அந்த இடத்து கிட்ட போய் பார்த்து, சுத்தி இருக்க செடிலாம் எடுத்துட்டு பெருக்கி சுத்த படுத்தி வைச்சிட்டா. அப்பறம் தினமும் தனியா இருக்றப்பலாம் கொஞ்ச கொஞ்சமா அந்த இடத்த தோண்ட ஆரமிச்சிச்சா. கொஞ்ச நாள் வரைக்கும் தோண்ட தோண்ட எதுவுமே இல்ல. அதாவது மண்ண தவிர வேற எதுவும் இல்ல, அன்னிக்கு வெள்ளி கிழம. பாட்டி கோயிலுக்கு போயிட்டு வரத்துக்குள்ள எவளோ முடியுதோ தோண்டிடணும்னு முடிவு பண்ணி தோண்ட ஆரமிச்சாளா… அங்க ஒரு தட்டு! அதுவும் வெள்ளி தட்டு. இப்ப கொஞ்சமா பயம் எட்டி பார்க்க ஆரமிச்சிது ஷாலுக்கு. தட்ட எடுத்துக்ட்டு போய் வீட்ல ஒளிச்சி வைச்சிட்டு பாட்டி வீட்டுக்கு வந்துட்டா. பாட்டி கோயில் விபூதி குங்குமம் வைச்சி விட்டதும் மெதுவா பாட்டி கிட்ட “பாட்டி பேய் இருக்கா??”னு கேட்டா. பாட்டி “ஓ இருக்கே, நான்  கூட பார்த்து இருக்கேன் சின்ன வயசுல”னு சொன்னதும் இன்னும் பயம் வந்துருச்சு ஷாலுக்கு. எதுவும் பேசாம அமைதியா உட்காந்துக்ட்டு இருந்தா. ராத்திரி அம்மா அப்பா கூட உட்காந்து சாப்பிட்டுறப்ப என்ன நடக்குமோ, ஒரு வேல தட்டு தானா வந்துடுச்சுனா?
பயந்துக்ட்டே சாய்ங்காலாம்  வீட்டுக்கு வந்த ஷாலு, டயரி எடுத்து எழுதுறா…..
“வீட்டுக்கு பின்னாடி ஒரு இடத்துல மரம் நடலாம்னு பார்த்தா பாட்டி அங்க தோண்ட கூடாதுணு சொல்லிட்டாங்க. ஏதேதோ கதையெல்லாம் சொன்னாங்க. அப்படி என்னதான் இருக்குனு பார்த்துடலாம்னு நான் அவங்க சொன்னத கேக்காம தோண்ட ஆரமிச்சேன். இன்னிக்கு திடீர்னு ஒரு தட்டு அங்கருந்து கிடைச்சிது. நான் பயந்தே போயிட்டேன். அந்த தட்ட என் ரூம் shelfல துணிக்கு கீழ ஒளிச்சு வைச்சு இருக்கேன். கடவுளே அம்மா பார்க்க கூடாது, அதே மாதிரி இன்னிக்கு ராத்திரி நாங்க சாப்ட்றப்ப பாட்டி சொன்ன மாதிரி அந்த தட்டு எங்க கிட்ட வர கூடாது. நாங்க தான் அந்த தத்தாவா ஒண்ணும் பண்ணலையே.
அப்பறம் இன்னிக்கு April 1ன்‌றத மறந்துட்டு லாஓசி அண்ணன் கதை எழுதுவான்னு நம்பி இங்க வந்து யாமாந்தவங்களுக்கு நல்ல அறிவ குடு….”
அட ஆமாங்க, யாராவது கத எழுதி இருக்கேன்னு சொன்னா நம்பிடுறதா?? நம்புங்க எனக்கு சுட்டு போட்டாலும் கத எழுத வராது. இப்ப இத எல்லாருக்கும் சொல்லாம வெறும் link மட்டும் share பண்ணி விடுங்க…அவங்களும் கத படிக்கட்டும்.
HAPPY ALL FOOLS DAY!