டிவிட்டரில் 1000 followers கிடைத்ததுமே ரேணிகுண்டாவிற்காக எழுத நினைத்த பதிவு, 2000 கடந்து 2345 கடந்த பின்னும் தாமதித்து கொண்டே வந்து இன்று எழுத்தாகிறது.
காட்சி 1:
பள்ளியில் பக்கத்து கிளாஸ் பொண்ணுக்கு scrap எழுதியும், பக்கத்துல உட்காற பையனுக்கு testimonial எழுதியும் Orkutட்டும் கையுமாக கழிந்த பொழுதுகள் கல்லூரியில் பழங்கதையான பின்…. 2009ல் facebook மற்றும் twitterல் கணக்கு தொடங்கினேன். கல்லூரி நட்புகள் பலர் இருந்ததால் அதிக நேரம் முகநூலில் கழிந்தது, பள்ளி நட்புகளும் உறவுகளும் சேர்ந்து கொள்ள… வாழ்க்கையின் அங்கமாக மாறியது முகநூல். டிவிட்டரை மறந்தே போனேன்.
காட்சி 2:
தில்லியில் மாதம் 35 ரூபாய்க்கு 350 SMSகளில் காலம் தள்ளிவிட்டு தமிழகத்தில் மாதம் 6000 SMS பார்த்ததும் SMS மீதும் ஒரு மோகம் வளர ஆரமித்தது. Forward SMSகளை தேடி பெறுவது.. இணையத்தில் இருந்து பெறுவது போன்றவை! ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் குறைந்தது 50 பேருக்காவது அணுப்பிய கால கட்டமெல்லாம் உண்டு! வழமையான மொக்கைகள், jokeகுகளை கடந்து வெகு சில மட்டுமே கவனம் ஈர்க்கும்….
(கட் பண்ணி ஓபன் பண்ணா சீன் சேஞ்ச்…)
காட்சி 3:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, match நடந்தால் score உடனுக்குடன் அலைபேசியில் தெரிய, வானிலை அறிக்கை முன்னறிவிப்பு, இந்த நாளில் அன்று, பிரபலங்களின் பொன்மொழிகளை தினம் படிக்க, தினம் ஒரு ஆங்கில வார்த்தை அர்த்தத்துடன் அறிந்து கொள்ள என பல விஷயங்களை Airtel Value Added Service ஆக வழங்கினர். இவையெல்லாம் என்னை ஈர்த்தாலும் விலையில்லாமல் இவற்றை பெற வழி இல்லாமலா போய்விடுமென இணையத்தில் தேடியதில் கண்ணில் பட்டது Google SMS Channels(இப்பொழுது முடக்கத்தில்). அதில் பதிந்து மேல் சொன்ன அனைத்தையும் இலவசமாக அலைபேசியில் பெற்று வந்தேன்.
(கட் பண்ணி மீண்டும் காட்சி 2க்கு போறோம்..)
காட்சி 2:
…..வழமையான மொக்கைகள், jokeகுகளை கடந்து வெகு சில மட்டுமே கவனம் ஈர்க்கும். நாமும் அந்த மாதிரி அணுப்பனும்னு காட்சி 3ல் வரும் பொன்மொழ்கள் போன்றவையை Forward செய்து வந்தேன். ஆனால் ஒரு நண்பன் அணுப்பும் செய்திகள் மட்டும் அதிகம் ரசிக்க வைக்கும். மேலும் கல்லூரி நேரமாயிருந்தாலும் Score Updates regularஆக inbox வந்து சேரும்!
2011 semester விடுமுறையில் அவனை சந்திக்க நேர்கையில் கேட்டே விட்டேன் “எப்படிடா இப்படி??” அவன் “அதான் டிவிட்டர் இருக்குல??” (இதுக்கும் டிவிட்டருக்கும் என்ன சம்பந்தம்??) “அதுல என்னடா இருக்கு???” “அங்க subscribe பண்ணிட்டா score எல்லாம் SMSஆ வந்துடும் மச்சி” (இதான உன் டக்கு??) “Freeஆவா மச்சி??” (அதானே முக்கியம் நமக்கு) “ஆமாடா” “எல்லாமேவா மச்சி?? என்னன்ன இருக்கு அதுல?” “எல்லாமே இருக்கு, உனக்கு என்ன வேணுமே subscribe பண்ணிக்கலாம்”
இப்ப காட்சி 1ல எடுத்து ஓரமா வைக்க டிவிட்டர் கணக்க தூசு தட்டி எடுத்து அவன் சொன்ன சில கணக்க எல்லாம் பின்தொடர்ந்து, mobile notification ON செய்த சில நாள் வானத்தில பறந்து கொன்டிருந்தேன், செய்திகள் இலவசமாக உடனுக்குடன் என் அலைபேசியில். மற்றும் பல நல்ல Forwardகளும்தேறின.
மேலும் அப்பொழுது Airtelல் 53000க்கு குறுஞ்செய்தி இலவசமாக இருந்தது. நான் அவன் மற்றும் சில நண்பர்கள் தில்லியில் இருந்தோம். Roamingல் SMSக்கு அதிக காசு, அதானல் பேச டிவிட்டரை உபயோக படுத்தி கொண்டிருந்தோம். அவன் எதாவது எழுதுனா நான் பதில் சொல்ல…. நான் 53000க்கு அணுப்பும் ஒரு குறுஞ்செய்தி நண்பர்கள் 4 பேரையும் சென்று சேரும். இலவசமா group chat. ( நல்லா இருக்குல??!!).
இப்படியாக எனக்கு டிவிட்டரை அறிமுகபடுத்தி என்னை முதன்முதலில் பின்தொடர்ந்த நண்பன்@arunraja2. மற்றும் உடன் இருந்தவர்கள் @vijayraj34, @Dhanushpriya மற்றும் @guruprasadkaif.
பின் தமிழ் சந்து அறிமுகமாகி, அதில் நுழைநது இன்று வரை எல்லாமே as they say REST IS HISTORY!! 🙂
பிகு: சந்தோஷ படாதிங்க, அந்த எஸ்.டி.டியும் ஒரு பதிவா கூடிய விரைவில் வரும்!